கூடுதல் பொறுப்பு கணக்குகளை ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

ஆற்காட்டில் கிராம கணக்குகளை ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் வியாழக்கிழமை  போராட்டம் நடத்தினர்.

ஆற்காட்டில் கிராம கணக்குகளை ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் வியாழக்கிழமை  போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்சங்கம் சார்பில், வருவாய் கிராமங்களில்  கூடுதல் பொறுப்பு வகிக்கும் பணிக்கான  கூடுதல் ஊதியம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதனைக் கண்டித்தும், மீண்டும் அமல்படுத்தக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கூடுதல் பொறுப்புக்கான கணக்குகளை ஒப்படைத்தனர். ஆற்காடு வட்டத்தில் பென்னகர், பாரிமங்கலம், பாலி, அத்தியானம், பின்னத்தாங்கல், மருதம் உள்ளிட்ட 26 வருவாய் கிராமங்களில் கூடுதல் பொறுப்பாக பணி செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள், கூடுதல் பொறுப்புக்கான வருவாய் கிராம கணக்குகளை ஆற்காடு  வட்டாட்சியர் அலுவலகத்தில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் விநாயகமூர்த்தி
யிடம் ஒப்படைத்தனர். 
குடியாத்தத்தில்...
குடியாத்தம், நவ. 8: பேர்ணாம்பட்டு வட்டத்தில் அரவட்லா, குண்டலபல்லி, எருக்கம்பட்டு, மாச்சம்பட்டு, சொக்கரிஷிகுப்பம், பல்லலகுப்பம், மொரசபல்லி, வளத்தூர், மேல்பட்டி, கீழ்ப்பட்டி, செம்பேடு, செட்டிகுப்பம், ஒலக்காசி, பட்டு ஆகிய 14 வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்களின் பணியிடங்கள் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளன. 
இந்த வருவாய் கிராமங்களில், பிற கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு ஏற்று பணியாற்றி வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட 14 வருவாய் கிராமங்களின் கணக்குகளை பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் கோட்டீஸ்வரனிடம் வியாழக்கிழமை திரும்ப ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com