ரூ. 43 லட்சத்தில் 771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருத்தணி அருகே, பள்ளிப்பட்டு வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 771 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சம்
ரூ. 43 லட்சத்தில் 771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


திருத்தணி அருகே, பள்ளிப்பட்டு வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 771 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், அரக்கோணம் எம்.பி. கோ.அரி ஆகியோர் புதன்கிழமை வழங்கினர்.
பள்ளிப்பட்டு வட்டம், பெத்தராமாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். இதில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி, திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு 771 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சம் மதிப்பிலான பல்வேறு துறையைச் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும், அதனால் மாணவர்கள் அடையும் பயன்கள் குறித்தும் பொதுமக்களின் முன்னிலையில் எடுத்துரைத்தார். மாணவியை கெளரவிக்கும் வகையில் ஆட்சியர் நினைவுப் பரிசாக புத்தகத்தை வழங்கிப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து, முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள் 112 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் 36 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா நகல் 104 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் (உட்பிரிவு) 41 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் 20 பயனாளிகளுக்கும், விதவை சான்று 10 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 15 பயனாளிகளுக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்று 21 பயனாளிகளுக்கும், மின்னணு புதிய குடும்ப அட்டை 84 பயனாளிகளுக்கும், வாக்களார் அடையாள அட்டை 59 பயனாளிகளுக்கும், இறப்புச் சான்று 2 பயனாளிகளுக்கும், சலவை பெட்டி 2 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை நல திட்ட உதவிகள் 197 பயனாளிகளுக்கும், பசுமை வீடுகள் திட்டம், 10 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் இரு பெண் குழந்தைகள் நிதியுதவி திட்டத்தில் 18 பயனாளிகளுக்கும், காதொலிக் கருவிகள் மற்றும் சோலார் பேட்டரி 10 பயனாளிகளுக்கும் மற்றும் மாநில தீவன வளர்ப்புத் திட்டத்தில் 30 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 771 பயனாளிகளுக்கு ரூ. 43 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களிடம் இருந்து 250 க்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்சியில், திருத்தணி கோட்டாட்சியர் பவணந்தி, முன்னாள் ஆவின் பால் நிறுவனத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், முன்னாள் திருத்தணி நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் கவுன்சிலர் டி.டி.சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com