வேலூர் சிறையிலிருந்து மேலும் 7 கைதிகள் விடுதலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் மத்திய சிறையிலிருந்து 10-ஆம் கட்டமாக மேலும் 7 கைதிகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் மத்திய சிறையிலிருந்து 10-ஆம் கட்டமாக மேலும் 7 கைதிகள் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, வேலூர் மத்திய சிறையிலிருந்து முதல் கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, 8 கட்டங்களாக 112 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், 
9-ஆம் கட்டமாக வியாழக்கிழமை ஆண் கைதிகள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதன்தொடர்ச்சியாக, 10-ஆம் கட்டமாக மேலும் 7 கைதிகள் வெள்ளிக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை 128 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி, கடந்த 6-ஆம் தேதி வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com