குடியிருப்புவாசிகளுக்கிடையே பிரச்னை: சமரசம் செய்த அதிகாரிகள்
By DIN | Published on : 12th September 2018 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடியாத்தம் நகரில் அருகருகே உள்ள இரு குடியிருப்புவாசிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அவர்களை போலீஸாரும், நகராட்சி அதிகாரிகளும் சமரசம் செய்தனர்.
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட காட்பாடி சாலையில், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இக்
குடியிருப்பில் உள்ள சில இளைஞர்கள், அருகே பிச்சனூரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சென்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, பிச்சனூர் பகுதி மக்கள் திங்கள்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினரும், நகராட்சி அதிகாரிகளும் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்தனர்.