லாரி மோதியதில் இளைஞர் சாவு
By DIN | Published on : 12th September 2018 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆற்காடு அருகே லாரி மோதியதில் இளைஞர் இறந்தார்.
சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐசக் ராஜேந்திரன் (28). இவர், பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காரில் பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆற்காட்டை அடுத்த வேப்பூர் புறவழிச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி சேத
மடைந்தது.
இதையடுத்து, ஐசக் ராஜேந்திரன் காயமின்றி காரில் இருந்து இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியே வந்த லாரி அவர் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.