சிகிச்சையின்போது சிறுவன் இறந்த சம்பவம்: அரசு மருத்துவரிடம் விசாரணை
By DIN | Published on : 15th September 2018 11:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவலத்தில் சிகிச்சையின்போது சிறுவன் இறந்த சம்பவத்தில் தப்பியோடிய அரசு மருத்துவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அருகே ஆழ்வார்தாங்கள் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-பவித்ரா தம்பதியின் மகன் கரண்குமார் (11). கரண்குமாருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாக திருவலம் பகுதியில் உள்ள தனியார் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தாராம். அந்த சிகிச்சை மையத்தை வேலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் அச்சுதானந்தன் நடத்தி வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் அச்சுதானந்தன்(படம்) கூறினாராம். இதையடுத்து மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரண்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, எதிர்பாராத
விதமாக சிறுவன் கரண்குமார் இறந்தார். இதையடுத்து மருத்துவர் அச்சுதானந்தன் அங்கிருந்து தப்பியோடினார்.
மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் கரண்குமார் உயிரிழந்ததாகக் கூறி, சிறுவனின் சடலத்துடன் பெற்றோர், உறவினர்கள் கார்ணாம்பட்டு பகுதியில் காட்பாடி-திருவலம் சாலையில் வெள்ளிக்
கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தப்பியோடிய மருத்துவர் அச்சுதானந்தன் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பதை அறிந்த திருவலம் போலீஸார், சனிக்கிழமை அங்கு சென்று அவரைப் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.