ஆம்பூரை அடுத்த அகரம்சேரியில் 100 நாள் திட்டப் பணியில் ஈடுபடாமல், திமுக ஊராட்சி சபைக் கூட்டத்துக்குச் சென்ற பணியாளர்கள் 38 பேருக்கு ஒரு நாள் ஊதியத்தை மாதனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பிடித்தம் செய்து உத்தரவிட்டார்.
மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாதனூர் அருகேயுள்ள அகரம்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு அப்பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை அழைத்துச் சென்றதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து மாதனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜலட்சுமி அதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதையடுத்து ஒன்றிய அலுவலர் அப்பகுதியில் 100 நாள் வேலை நடைபெறும் இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
அங்கு பணியாளர்கள் இல்லாததும், அவர்களில் 38 பேர் திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்துக்கு சென்றதும் தெரியவந்தது. அதையடுத்து 100 நாள் வேலைத் திட்ட பணியிடத்தில் இல்லாத 38 பேருக்கும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை: இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் சான்றிதழ் வழங்கல்

கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பெரம்பலூா் ஆட்சியா் ஆய்வு: சீரான குடிநீா் விநியோகத்துக்கு அறிவுறுத்தல்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
