ஏஐடியுசி 19ஆவது மாநில மாநாடு வேலூர் அருகே தொரப்பாடியில் புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
அனைவருக்கும் மாதம் ரூ.21 ஆயிரத்துக்கும் குறையாத அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது, ரூ.6 ஆயிரத்துக்கு குறையாத ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொரப்பாடி அழகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டின் தொடக்க நாளான புதன்கிழமை மாலை வேலூர் அண்ணா சாலையில் பேரணியும், மாநகராட்சி அலுவலகம் அருகில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளன. மாநாட்டில் மூத்த இடதுசாரி கட்சித் தலைவர்களான குருதாஸ் தாஸ்குப்தா, அமர்ஜீத் கௌர், ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், ஆர்.முத்தரசன், கே.சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை மாநாட்டுக் குழு தலைவர் சி.ஜி.ராஜாராம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!

ஆள்வது என்ன எளிதோ மைந்தா?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


