பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க அடிக்கல்

பெரும்பிடுகு முத்தரையர் அரசருக்கு சிலை அமைக்க வேலூரில் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரும்பிடுகு முத்தரையர் அரசருக்கு சிலை அமைக்க வேலூரில் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழகத்தில் ஜமீன்தார் வம்சமாக வாழ்ந்த முத்தரையர் சமூகம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி. 600 முதல் கி.பி. 900 வரை ஆட்சி புரிந்துள்ளனர். இதில், மிக  பிரபலமான ஆட்சியாளர்களாக பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், அவரது மகன் மாறன் பரமேஸ்வரன் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீ புற்று மகரிஷி சித்தர் கோயிலில் பெரும்பிடுகு முத்தரையர் அரசனுக்கு சிலை அமைக்க வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. 
அகில இந்திய வேலூர் முத்தரையர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் 
கே.பி.அருச்சுனன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.
அகில இந்திய வேலூர் முத்தரையர் அறக்கட்டளைத் தலைவர்
ஜெ.சரவணன், செயலர் சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் கிஷோர், வினோத்குமார், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com