சுடச்சுட

  

  மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவை இடைத் தேர்தலையொட்டி, குடியாத்தத்தில் துணை ராணுவப்  படையுடன் இணைந்து போலீஸார் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு  நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. நெல்லூர்பேட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய அணிவகுப்பு, சந்தப்பேட்டை பஜார்,  தாழையாத்தம் பஜார், சுண்ணாம்புபேட்டை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காட்பாடி சாலை, நான்கு முனை கூட்டுச் சாலை அருகே நிறைவடைந்தது.
   இதில், குடியாத்தம் டி.எஸ்.பி. என்.சரவணன், நகர காவல் ஆய்வாளர் இருதயராஜ், கிராமிய காவல் ஆய்வாளர் கவிதா, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன், துணை ராணுவப் படையினர், உள்ளூர் போலீஸார், ஆயுதப்படை போலீஸார் கலந்து கொண்டனர்.
  வாணியம்பாடியில்...
  வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் துணை ராணுவம் மற்றும் வாணியம்பாடி சரக போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி. முரளி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் சந்திரசேகரன், மங்கையர்க்கரசி, அமுதா, ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில், கோணாமேடு பகுதியிலிருந்து தொடங்கிய ஊர்வலம், காதர்பேட்டை, பேருந்து நிலையம் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். 
  இதில், 2 கம்பெனி துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் கலந்து கொண்ட னர். இதேபோல், ஆலங்காயம் பகுதியிலும் துணை ராணுவம் மற்றும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 
  ஆம்பூரில்...
  ஆம்பூரில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். காவல் ஆய்வாளர்கள் ஹரிகிருஷ்ணன், கோகுல்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  ஊர்வலம் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் துவங்கி நேதாஜி ரோடு, பஜார், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய சாலைகள், தெருக்கள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai