சுடச்சுட

  

  தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது: வாக்குக்கு பணம் அளிப்பதைத் தடுக்க தீவிர முயற்சி

  By DIN  |   Published on : 16th April 2019 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து, வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க போலீஸார் கண்காணிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வியாழக்கிழமை (ஏப். 18) நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19-இல் தொடங்கி 26 வரையும், பரிசீலனை 27-ஆம் தேதியும், திரும்பப்பெற 29ஆம் தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டு அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
  இதன்படி, வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் 23 வேட்பாளர்களும், அரக்கோணம் தொகுதியில் 19 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, மாவட்டத்தில் பேரவை இடைத் தேர்தல்கள் நடைபெறும் குடியாத்தம் தொகுதியில் 7 பேரும், ஆம்பூர் தொகுதியில் 10 பேரும், சோளிங்கரில் 12 பேரும் போட்டியிடுகின்றனர்.
  இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவரவர் கட்சித் தலைவர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். தவிர, வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தொகுதி முழுவதும் வாக்காளர்களை சந்தித்து பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
  தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையொட்டி, வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
  இதனிடையே, மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் அதன்பிறகு வெளியூர் நபர்கள் யாரும் தொகுதிகளில் தங்கியிருக்கக் கூடாது என்பதால், வெளியூர் நபர்கள் தங்க வைப்பட்டுள்ளனரா? என்பதைக் கண்காணிக்க போலீஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
  இதேபோல், பிரசாரம் ஓய்ந்த பிறகு வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai