சுடச்சுட

  

  ஆம்பூர் நகராட்சி சார்பாக 100 சதவீதம் வாக்களிக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நகராட்சிப் பொறியாளர் எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
  அதைத் தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆணையாளர் சௌந்தர்ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆம்பூர் நேதாஜி சாலை வழியாக சென்ற ஊர்வலம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai