சுடச்சுட

  

  செல்வ நாகலாம்மாள் கோயிலில் 4-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா

  By DIN  |   Published on : 17th April 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஆலங்காயம் வைசியர் வீதியில் அமைந்துள்ள செல்வநாகலாம்மாள் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதன் 4-ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
  திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், துர்கை ஹோமம், சண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி, தீபாராதனை, அம்மனுக்கு மஹாஅஷ்டாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. 
  திங்கள்கிழமை காலை 
  8 மணிக்கு வித்யாபீட குருஜி பாரதி முரளிதர சுவாமிகள் தலைமையில் செல்வ நாகலாம்மாளுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு கூழ்வார்த்து, பொங்கலிட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். 
  மாலையில், பம்பை, உடுக்கை, வாத்தியங்கள் முழங்க, அம்மன் (உற்சவர்) முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai