சுடச்சுட

  


  நாட்டறம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள், 3 கடைகள் எரிந்து சேதமாயின.
  நாட்டறம்பள்ளி சந்தை பனந்தோப்பு பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் அருகே பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் துப்புரவுப் பணியாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு வேலு என்பவர் குடிசை அமைத்து தேநீர்க் கடை நடத்தி வருகிறார். 
  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில் தேநீர்க் கடை தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால் கடையில் இருந்த சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் இருந்த அபுராம், பீரம்மா ஆகியோரின் 2 வீடுகளிலும் தீ பரவியது. இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆவணங்களுடன் அலுவலகங்களைவிட்டு வெளியே ஓடினர்.
  தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் உமாரம்யா, காவல் ஆய்வாளர் சாந்தலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். 
  இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருந்த 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தப்பின. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai