சுடச்சுட

  

  வேலூர் தொகுதியில் மே 23-க்கு முன்பே தேர்தல் நடத்த வேண்டும்'

  By DIN  |   Published on : 17th April 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மே 23-ஆம் தேதிக்கு முன்பாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர்.சுரேஷ் கூறினார். வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து அவர் கூறியது:
  வாக்குக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், வேட்பாளர் என்ற அடிப்படையில் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.  
  இத்தொகுதிக்கான தேர்தலை, தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மே 23-ஆம் தேதிக்கு முன்பாகவே நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தும்போது டி.எம்.கதிர்ஆனந்த் (திமுக வேட்பாளர்) மீண்டும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.
  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.தீபலட்சுமி: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதால் மற்ற வேட்பாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீடுகளில் பணம் கைப்பற்றப்பட்டபோதே அவரை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு, திட்டமிட்டபடி தேர்தலை வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், தேர்தல் ஆணையம் அதை பரிசீலிக்கவில்லை. வேலூர் தொகுதிக்கான தேர்தலை மே 23-ஆம் தேதிக்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும்.  அதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai