சுடச்சுட

  

  22-இல் விஐடியில் கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி தொடக்கம்

  By DIN  |   Published on : 17th April 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம் வரும் 22-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடக்கிறது. 
  இதுகுறித்து, விஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  வேலூர் விஐடியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 16-ஆம் ஆண்டு விளையாட்டுப் பயிற்சி முகாம் வரும் 22-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
  இந்தப் பயிற்சி முகாமில் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், கராத்தே, கால்பந்து, வளைகோல்பந்து, எறிபந்து, சதுரங்கம், யோகாசனம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி முகாம்களில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சியில் சேர கட்டணம் கிடையாது. 
  இதில், மாவட்டத்திலுள்ள தலை சிறந்த பயிற்சியாளர்கள் பங்குபெற்று பயிற்சி அளிக்க உள்ளனர். தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்கி 8 மணி வரை விளையாட்டுப் பயிற்சி நடைபெறும். இதற்காக காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து விஐடி வரை இலவசப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22-ஆம் தேதி விளையாட்டுப் பயிற்சி முகாமை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைக்க உள்ளார். 
  விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், துணைவேந்தர் ஆனந்த் ஆ.சாமுவேல், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
  விஐடியில் இதுவரை நடைபெற்ற கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாமில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai