சுடச்சுட

  

  வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை சார்பில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மகாவீர் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
  விழாவுக்கு, சிறுபான்மைத் துறை மாவட்டத் தலைவர் ஏ.இலியாஸ்கான் தலைமை வகித்தார். காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லம்பாஷா, மகா வீரரின் உருவப் படத்துக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், மாவட்ட விவசாய அணிச் செயலர் ஜெயபால், மாநில ஒருங்கிணைப்பாளர் பரீத் அஹமத், சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் முதஸ்சீர் பாஷா, கவியரசன், முஜம்மில், ரபீக், ஷேக் அஸ்லம், சுகுணா, கார்த்திக், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   இதேபோல், வாணியம்பாடி ஜெயின் சங்கம் சார்பில், பஜார் பகுதியில் அனைத்து மதத்தினருக்கும், சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஏழை  எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.


  தன்வந்திரி பீடத்தில்...
  வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பகவான் மகாவீரர் ஜயந்தியையொட்டி, சிறப்பு ஹோமத்துடன் பீடத்தில் பகவான் மகாவீரர் சந்நிதியில் புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
  இதில் மக்கள் செழிப்புடன் வாழ வேண்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

  திருப்பத்தூரில்...
  மகாவீர் ஜயந்தியையொட்டி, திருப்பத்தூரில் ஜெயின் சமூகத்தினர் சார்பில், புதன்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.
   இதில்அலங்கரிக்கப்பட்ட மகாவீரரின் சிலையுடன், செட்டித் தெருவில் உள்ள ஜெயின் கோயிலிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், கச்சேரி தெரு, பஜார் வழியாகச் சென்று மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது.
  ஊர்வலத்தில் மகாவீரர் அருளிய நற்பண்புகளை கடைப்பிடித்து வாழ்வது குறித்த பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
   இதில், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 
  200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai