ஏப். 22 முதல் முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்

வேலூர் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான

வேலூர் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அக்கல்லூரி முதல்வர் ஆர்.சுகிர்தராணி ஜுலினா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலூர் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு, பிஏ பொருளியல், பி.காம்., பிபிஏ, பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல், பி.எஸ்ஸி. கணினி அறிவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. சத்துணவு பரிமாறல் நிர்வாகம், பத்திய உணவியல்கள் ஆகிய 12 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் வழங்கப்படும். நிகழ் கல்வியாண்டில் மொத்த மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 984 (சுழற்சி 1, 2). இதில், ஆண்களுக்கு 685, பெண்களுக்கு 299 இடங்கள் அடங்கும். 
விண்ணப்பக் கட்டணம் எஸ்.சி., எஸ்.சி. (ஏ), எஸ்.டி. பிரிவினர் (பதிவுக் கட்டணம்) ரூ. 2-ம், மற்ற பிரிவினர் ரூ. 50-ம் செலுத்த வேண்டும்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மே 20-ஆம் தேதி முதல் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com