ஆம்புலன்ஸ் மோதியதில் தொழிலாளி பலி
By DIN | Published On : 22nd April 2019 02:00 AM | Last Updated : 22nd April 2019 02:00 AM | அ+அ அ- |

அணைக்கட்டு அருகே ஆம்புலன்ஸ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
அணைக்கட்டு வட்டம், புலிமேடையை அடுத்த குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (60), தொழிலாளியான இவர், சனிக்கிழமை புலிமேட்டில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த 108 ஆம்புலன்ஸ், கண்ணன் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.