Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 52 லட்சம் கல்விக் கடன்: பாரத ஸ்டேட் வங்கி ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 52 லட்சம் கல்விக் கடன்: பாரத ஸ்டேட் வங்கி ஒப்புதல்

    By DIN  |   Published on : 24th April 2019 11:45 PM  |   அ+அ அ-   |    |  

    ராணிப்பேட்டை பகுதியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற 13 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்விக்கென தலா ரூ.4 லட்சம் வீதம்  
    ரூ. 52 லட்சம் கல்விக் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. 
    2018-19-ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்  தேர்வு எழுதிய ராணிப்பேட்டை, காரை, வாலாஜாபேட்டை, வள்ளுவம்பாக்கம், சோளிங்கர் ஆகிய 5 அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவர்களில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க வாலாஜாபேட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்வந்தது. 
    ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆசிரியர் கமலேஷ் வரவேற்றார். ராணிப்பேட்டை கல்வி மாவட்ட  அலுவலர் அருளரசு, வாலாஜாபேட்டை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஆபித் அகமது ஆகிய இருவரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு மொத்தம் 13 மாணவர்களுக்கும் அதிகபட்சமாக தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம்  ரூ. 52 லட்சம் கல்விக் கடனுக்கான ஒப்புதல் ஆணை மற்றும் பரிசு வழங்கினர். மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த பின் அங்கு கட்டணம் தொடர்பான கடிதங்களைப் பெற்று வங்கியில் சமர்ப்பித்தவுடன் வரைவோலை வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வாலாஜாபேட்டை பாரத ஸ்டேட் வங்கித் துணை மேலாளர் விஜயகுமார், அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பாளையத்தாசன் (காரை), தயாளன் (வாலாஜாபேட்டை), ஈஸ்வர பாபு (சோளிங்கர்), பரிமளா (வள்ளுவம்பாக்கம்) மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் சேரன் நன்றி கூறினார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp