மகாபாரத சொற்பொழிவு: பகாசூரனுக்கு உணவு சேகரிக்கும் நிகழ்ச்சி

ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியில் மகாபாரத சொற்பொழிவின் ஒரு பகுதியாக பகாசூரனுக்கு உணவு சேகரிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியில் மகாபாரத சொற்பொழிவின் ஒரு பகுதியாக பகாசூரனுக்கு உணவு சேகரிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  அக்னிவசந்த விழாவையொட்டி, மகாபாரத சிறப்பு சொற்பொழிவு ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி, மே 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புலவர் மா. கோவிந்தசாமி மகாபாரத சிறப்பு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். கோவிந்த தேவா கவி பாடி வருகிறார். 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை பகாசூரனுக்கு உணவு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பகாசூரன், பீமன் வேடமணிந்த நபர்கள் மாட்டு வண்டிகளில் வீரவர் கோயில், சோமலாபுரம், சின்னகொம்மேஸ்வரம், ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று உணவு சேகரித்தனர்.    
விழாவுக்கான ஏற்பாடுகளை வீரவர் கோயில் தர்மகர்த்தா கே.என்.அருணகிரி, பாரத கமிட்டித் தலைவர் ஆர்.டி.பாலாஜி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com