ஸ்ரீபுரத்தில் புதிய ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு: சக்தி அம்மா, மத்திய அமைச்சர் பங்கேற்பு

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அருளாசி வழங்கி தலைமை வகித்தார். மத்திய ஆயுஷ் மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ஸ்ரீபாத் யெஸ்சோ நாயக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய ஆயுர்வேத மருத்துவமனையைத் திறந்து வைத்து பேசியது: 
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆயுர்வேதம், யோகா மற்றும் நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் ஒரு துறையாக மட்டுமே செயல்பட்டு வந்தது. தொடர்ந்து மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், இதற்கென்று தனியாக ஆயுஷ் என்று மத்திய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஆயுர்வேதம், நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிவற்றில் ஏதேனும் ஒன்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆயுஷ் முறையிலான சிகிச்சை முறைகளை மேம்படுத்தும் வகையில், தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பாக 150 மாவட்டங்களில் 150 அரசு மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றை ஒன்றிணைத்து ஆயுஷ் என்றவாறு தனியாக ஒரு பிரிவு தொடங்கப்பட உள்ளது. அங்கு சுமார் 50 படுக்கை அறை வசதி கொண்ட வகையில் இப்பிரிவு செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் 40 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. அதேபோல் மக்களிடையே இந்த சிகிச்சை முறைகளைக் கொண்டு செல்லும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
சக்தி அம்மாவின் அயல்நாட்டு பக்தர் லின்ஸ்நைடர், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலாஜி, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநர் சுரேஷ் பாபு, நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் மற்றும் அயல்நாட்டு பக்தர்கள், மருத்துவர்கள், நர்ஸிங் கல்லூரி மாணவிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com