சுடச்சுட

  

  ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே யார்டில் முதியவர் செவ்வாய்க்கிழமை தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், ரயில்வே மருத்துவர் அங்கு சென்று பரிசோதனை செய்ததில், முதியவர் உயிரிழந்தது தெரியவந்தது.
  அவரது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த ஆவணங்கள் அவர் ஆந்திர மாநிலம் குருமதி பகுதியைச் சேர்ந்த சின்னவெங்கடேஸ்வரலு (72) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai