Enable Javscript for better performance
பயங்கரவாதிகள் ஊடுருவல்? 400 போலீஸார் தீவிர கண்காணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதிகள் ஊடுருவல்? 400 போலீஸார் தீவிர கண்காணிப்பு

    By DIN  |   Published on : 24th August 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவுக்குள் இலங்கை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து வேலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 400 போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    இலங்கை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 6 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வேலூர் மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் சுமார் 400 போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
    இவர்கள் தமிழக, ஆந்திர எல்லைப்பகுதிகளில் தீவிர வாகனச் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். தவிர, மாவட்டம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்களிலும் பயணிகளின் உடமைகளைத் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர். இதுதவிர, பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட மக்கள் கூடும் முக்கிய இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
    வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 
    மேலும், தனியார் விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுவதுடன், சந்தேகத்துக்குரிய நபர்களாக இருந்தால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
    இதனிடையே, பொது இடங்களில் சந்தேகத்துக்குரிய பொருள்கள் கிடந்தால் அதனை பொதுமக்கள் தொடாமல் உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
    மேலும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் அவர்கள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai