Enable Javscript for better performance
விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஆற்காடு வட்டார வேளாண்மைத் துறை ஆகியவை இணைந்து நடத்திய விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    ஆற்காட்டை அடுத்த தக்காங்குளம் கே.எம்.இயற்கை வழி வேளாண் பண்ணையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வங்கியின் ஆற்காடு கிளை முதன்மை மேலாளர் ஜி.இன்பராசு தலைமை வகித்தார். 
    கே.எம்.இயற்கை வழி வேளாண் பண்ணை உரிமையாளர் கே.எம்.பாலு, ஆற்காடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சம்பத், இயக்குநர் களர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் கிளை துணை மேலாளர், வெ.ராஜதுரை வரவேற்றார். 
     வங்கியின்கடன் திட்டங்களான தங்க நகைக் கடன், பயிர்க் கடன், கறவை மாட்டு கடன், சொட்டு நீர்ப் பாசனம், விவசாயம் சார்ந்த நடவு இயந்திரம், டிராக்டர், அறுவடை இயந்திரம், புதிய திட்டமான சொத்து முதலீட்டுக் கடன் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இதில் ஆற்காடுவேளாண்மைத்துறை வேளாண்மை அலுவலர்ஆ.லீலாவதி ஆற்காடு வட்டார ஆத்மா திட்ட மேலாளர் ர.சீனிவாசகுமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் வையாபுரி, எம்.வினோத்குமார் மற்றும் முன்னோடி விவசாயிகள் உள்பட 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.  
    கூட்டத்தில், பயிர்க் கடன், பவர் டில்லர், கல்விக் கடன் உள்ளிட்டவற்றுக்கு, விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. துணை வேளாண் அலுவலர் ஆர்.கண்ணன் நன்றி கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai