திருமலை: பாபவிநாசம் நுழைவாயில் வளைவு இடித்து அகற்றம்

திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில்  இருந்த நுழைவாயில் வளைவை தேவஸ்தான நிர்வாகம் இடித்து அகற்றியுள்ளது.

திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில்  இருந்த நுழைவாயில் வளைவை தேவஸ்தான நிர்வாகம் இடித்து அகற்றியுள்ளது.
திருமலையில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் பாபவிநாசம், ஆகாச கங்கை, வேணுகோபால ஸ்வாமி கோயில், ஜபாலி தீர்த்தம், குமாரதாரா பசுப்புதாரா நீர்த் தேக்கங்கள், கோகர்பம் நீர்த்தேக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சாலை வசதி செய்துள்ளது. 
இந்த சாலையில் முகப்பில் 1959-ஆம் ஆண்டில் ஒரு நினைவு வளைவை தேவஸ்தானம் ஏற்படுத்தியிருந்தது. அந்த வளைவு அப்போதைய ஆந்திர முதல்வர் நீலம் சஞ்சீவரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது.
மிகவும் பழங்கால நினைவு வளைவான அதை தேவஸ்தான நிர்வாகம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றியது.
 திருமலையில் தற்போது வெளிவட்டச் சாலை பணிகள், சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்டவை நடந்து வருகிறது. மேலும் இந்த வளைவு மிகவும் குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுவதுடன், அதன் வழியாக பேருந்து சென்று வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் தேவஸ்தானம் அந்த நினைவு வளைவை அகற்றியுள்ளது. 
திருமலையில் இருந்த பழைமை வாய்ந்த நினைவு வளைவு அகற்றப்பட்டதால் உள்ளூர்வாசிகள் மற்றும் பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com