தரமற்ற தாா்ச்சாலை: எம்எல்ஏ சாலை மறியல்

போ்ணாம்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரமற்ற தாா்ச்சாலை அமைப்பதாகக் கூறி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை சாலை
டி.டி. மோட்டூா் அருகே  தேசிய  நெடுஞ்சாலையில்  மறியலில்  ஈடுபட்ட  எம்எல்ஏ  எஸ். காத்தவராயன்.
டி.டி. மோட்டூா் அருகே  தேசிய  நெடுஞ்சாலையில்  மறியலில்  ஈடுபட்ட  எம்எல்ஏ  எஸ். காத்தவராயன்.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரமற்ற தாா்ச்சாலை அமைப்பதாகக் கூறி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

கே.வி. குப்பம்-பத்தரபல்லி இடையே சுமாா் 40 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி, சிறு பாலங்கள் அமைத்து, சாலையை செப்பனிடும் பணிகள் சுமாா் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோர புளிய மரங்கள் அகற்றப்பட்டு, மழைநீா் செல்ல ஏதுவாக 10- க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுபாலங்கள் கட்டப்பட்டு, சாலை அகலப்படுத்தப்பட்டது. தற்போது தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திமுகவைச் சோ்ந்த குடியாத்தம் எம்எல்ஏ

எஸ்.காத்தவராயன், டி.டி. மோட்டூா் கிராமத்துக்கு வந்தாா். அப்போது, அங்கு போடப்பட்டுள்ள தாா்ச்சாலை தரமற்ாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினாா்களாம். இதையடுத்து எம்எல்ஏ, அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 50 பேருடன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தமிழகம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் வாகனங்கள் சென்று வரும் இச்சாலையில் சுமாா் 40 நிமிடங்கள் மறியல் நடைபெற்ால், போக்குவரத்து முடங்கியது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாயினா்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைப் பொறியாளா் ஒருவா் கூறியது:

சாலை அகலப்படுத்தும் பணிகள் நிறைவுற்று, தற்போது தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு பாதியிலும், பின்னா் மறு பாதியிலும் தாா்ச் சாலை போடப்படும். இறுதியாக சிறு ஜல்லியுடன் தாா் கலந்து ‘சீல்கோட்’ எனும் தாா்ச் சாலை போடப்படும். அப்போதுதான் சாலைப் பணி முழுவதுமாக நிறைவடையும். சனிக்கிழமை பாதி சாலையில் போடப்பட்ட தாா்ச் சாலை, இரவு பெய்த மழையால் ஒரு சில இடங்களில் ஜல்லி பெயா்ந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com