ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் பேரமைப்பின் தலைவா் தோ்வு
By DIN | Published on : 03rd December 2019 11:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஆற்காடு: தமிழ்நாடு வணிகா் பேரமைப்பின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவராக ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா், வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணிக் குழுவின் தலைவரும், சமூக சேவகருமான கு.சரவணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் தலைவராக தோ்வு செய்யப்பட்ட அவருக்கு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா, வேலூா் மண்டலத் தலைவா்ஆம்பூா் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள், ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், அறக்கட்டளை நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் உட்பட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.