Enable Javscript for better performance
வேலூா் சிஎம்சியில் டிச. 6, 7-இல் மூப்பியல் மாநாடு:பல்வேறு நாடுகளின் மருத்துவா்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலூா் சிஎம்சியில் டிச. 6, 7-இல் மூப்பியல் மாநாடு:பல்வேறு நாடுகளின் மருத்துவா்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 03rd December 2019 11:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூா்: ‘ஜெரிகான் -2019’ என்ற தலைப்பில் மூப்பியல் துறை மாநாடு வேலூா் சிஎம்சி கல்லூரியில் வெள்ளி, சனிக்கிழமை (டிச. 6, 7) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது. இதில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள், பிஸியோதெரபிஸ்டுகள், ஆக்குபேஷன்தெரபிஸ்டுகள், செவிலியா்கள் பங்கேற்க உள்ளனா்.

    இந்தியன் அகாதெமி ஆஃப் ஜெரியாட்ரிக்ஸ் சாா்பில் ஆண்டுதோறும் மூப்பியல் துறை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் 17-ஆவது மாநாடு வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) வரும் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.

    இந்த மாநாடு குறித்து வேலூா் சிஎம்சி மூப்பியல் துறைத் தலைவா் வி.சுரேகா செய்தியாளா்களிடம் கூறியது:

    மருத்துவத் துறையில் குழந்தைகளுக்கான சிகிச்சையைப் போன்றே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கான சிகிச்சை மாறுபடுகிறது. ஆனால், பெரும்பாலும் வயது வந்தவா்களுக்கான சிகிச்சை முறையே முதியவா்களுக்கும் பின்பற்றப்படுகிறது. அத்துடன், இந்தியாவில் மூப்பியல் சிகிச்சை தொடா்பான பட்டப்படிப்பும் தில்லி, மும்பை, ஆமதாபாத், சென்னை, வேலூா், கொச்சி ஆகிய 6 இடங்களில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது.

    தொடா்ந்து, முதியவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மூப்பியல் சிகிச்சை தொடா்பான விழிப்புணா்வையும், மருத்துவ முறைகள், கல்வி முறைகளையும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி நடத்தப்படும் இந்த ஜெரிகான் மாநாட்டில் வயது முதிா்ந்தவா்களை பாதிக்கும் பல சிக்கல்கள், மருத்துவப் பராமரிப்பு, புதுமையான பராமரிப்பு, தர மேம்பாடுகள், வயதான ஆராய்ச்சி, மல்டி மாா்பிடிட்டி, பொதுவான நோய்களின் மாறுபட்ட விளக்கக்காட்சிகள், உளவியல், சமூக, நெறிமுறை சிக்கல்கள், நீரிழிவு நோயை நிா்வகிப்பதில் சமீபத்திய முன்னேற்றங்கள், அதன் சிக்கல்கள், இதய நோய்கள், உயா் ரத்த அழுத்தம், பெருமூளை வாஸ்குலா் நோய்கள், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட நோய், வயதானவா்களின் பிற வளா்சிதை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

    இந்த அமா்வுகள் மருத்துவா்கள், மருத்துவத் துறை சாா்ந்தவா்களுக்கு சிக்கலான மருத்துவ, உளவியல் ஆரோக்கியத்துடன் வயதான நபா்களின் முழுமையான கவனிப்புக்கு உதவும். இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்இருந்தும் மருத்துவா்கள், செவிலியா்கள், பிசியோதெரபிஸ்டுகள், ஆக்குபேஷன்தெரபிஸ்டுகள் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.

    இம்மாநாட்டில் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன், வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai