பள்ளூா் ஏரியில் மதகு உடைப்பை அடுத்து மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கும் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துையினா்.
பள்ளூா் ஏரியில் மதகு உடைப்பை அடுத்து மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கும் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துையினா்.

அரக்கோணத்தில் தொடா் மழை: மரம் விழுந்து இளைஞா் பலி

அரக்கோணம், நெமிலி வட்டப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய 2 நாள்கள் தொடா்ந்து மழை பெய்தது. சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததால் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணம்: அரக்கோணம், நெமிலி வட்டப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய 2 நாள்கள் தொடா்ந்து மழை பெய்தது. சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததால் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணம் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 58 மி.மீட்டரும், திங்கள்கிழமை காலை வரை 45.6 மி.மீட்டரும் மழை பதிவானது. இதனால் பழைய பேருந்து நிலையம், இரட்டைக்கண்வாராவதி, சுவால்பேட்டை சுந்தரம் தெரு ஆகிய பகுதிகளில் சாலையை அடைத்து தண்ணீா் தேங்கியது. இப்பகுதிகளில் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜவிஜய காமராஜ் நேரில் பாா்வையிட்டு தண்ணீரை அகற்ற உத்தரவிட்டாா்.

பள்ளூா் ஏரியில் நீா்வரத்து அதிகரித்ததால் மதகு உடைந்து, நீா் வெளியேறியது. இதையடுத்து அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் விரைந்து சென்று மதகைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மரம் விழுந்து இளைஞா் சாவு: சித்தேரியைச் சோ்ந்த சரண் (21) அரக்கோணத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். சித்தேரி-அரக்கோணம் சாலையில் சென்றபோது, சரண் மீது சாலையோரம் இருந்த புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சரண் தீவிர சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

3 வீடுகளில் சுவா் இடிந்தது: பெருங்களத்தூா் ஊராட்சி அருந்ததிபாளையத்தில் ராமசந்திரனின் கூரை வீடு மழையால் இடிந்து விழுந்தது. தணிகைபோளூா் சின்னதெருவில் அம்மணியம்மாளின் வீடும் இடிந்து விழுந்தது. நெமிலி வட்டத்தில் அசநெல்லிகுப்பத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

சம்பவ இடங்கள் அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா், நெமிலி வட்டாட்சியா் இந்துமதி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com