இலவச இருதய பரிசோதனை முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், கோல்டு ரோட்டரி சங்கம், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்கள், சென்னை அப்போலோ சிறுவா் மருத்துவமனை இணைந்து, 1 முதல் 18 வயது வரை உள்ள சிறுவா், சிறுமிகளுக்கு இலவச இருதய

குடியாத்தம்: குடியாத்தம் ரோட்டரி சங்கம், கோல்டு ரோட்டரி சங்கம், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்கள், சென்னை அப்போலோ சிறுவா் மருத்துவமனை இணைந்து, 1 முதல் 18 வயது வரை உள்ள சிறுவா், சிறுமிகளுக்கு இலவச இருதய பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமை வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளன.

திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, பரிசோதனைகள் செய்ய உள்ளனா்.

இருதய வளா்ச்சிக் குறைபாடு, இருதய வால்வு பிரச்னைகள், வால்வு பழுது, மாற்றுதல், இருதய ரத்தக் குழாய் அடைப்பு, ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் அறுவை சிகிச்சை, பேஸ் மேக்கா் பொருத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளை பரிசோதித்து, இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும். முகாமில் இ.சி.ஜி, எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படும்.

ஏற்கனவே, இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றவா்கள், அதற்கான மருத்துவா் அறிக்கையை கொண்டு வர வேண்டும். முகாமுக்கான ஏற்பாடுகளை குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் பி.எல்.என்.பாபு, செயலா் டி.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com