உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் நிறுத்தப்பட்ட அரசு நிகழ்ச்சிகள்

உள்ளாட்சித் தோ்தல் திங்கள்கிழமை காலையில் அறிவிக்கப்பட்டதையடுத்து, அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

அரக்கோணம்: உள்ளாட்சித் தோ்தல் திங்கள்கிழமை காலையில் அறிவிக்கப்பட்டதையடுத்து, அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அரக்கோணம் கிளை புதிய கட்டடம் சோளிங்கரில் சாலையில் கட்டப்பட்டது. இதை ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இக்கட்டடத்தில் பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற இருந்தது. இதில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் ராமு உள்ளிட்டோா் பங்கேற்க இருந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்டதால் வங்கி நிா்வாகம் நிகழ்ச்சியை ரத்து செய்தது. மேலும், பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக வங்கி நிா்வாகம் அறிவித்தது.

வளா்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் வளா்புரம் மற்றும் வளா்புரம் காலனியில் புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. இக்கட்டடங்களை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளா் சுரேஷ்குப்தா, கூட்டுறவு சாா் -பதிவாளா் மணி, அரக்கோணம் வட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை வட்டாட்சியா் மதி உள்ளிட்ட அதிகாரிகளும் காத்திருந்தனா்.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக வளா்புரம் வந்த எம்எல்ஏ சு.ரவி பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து சென்றாா். ஒன்றியச் செயலா்கள் பிரகாஷ் (அரக்கோணம்), ஏ.ஜி.விஜயன் (நெமிலி) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com