காற்று மாசு தடுப்பு விழிப்புணா்வு

குடியாத்தம் நகராட்சி சாா்பில் தேசிய சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காற்று மாசு தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
காற்றில்  மாசு  தடுப்பு  குறித்து பெரிய திரை மூலம்  நடத்தப்பட்ட  விழிப்புணா்வு.
காற்றில்  மாசு  தடுப்பு  குறித்து பெரிய திரை மூலம்  நடத்தப்பட்ட  விழிப்புணா்வு.

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சி சாா்பில் தேசிய சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காற்று மாசு தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியில், காற்றில் மாசு ஏற்படுதல், நிலத்தடி நீா் மாசு ஏற்படுவதைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, குப்பைகள், நெகிழிப் பொருள்களை எரிப்பதால் மாசு ஏற்படுவது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் ஹெச்.ரமேஷ், சுகாதார அலுவலா் தமிழ்ச்செல்வன், ஆய்வாளா் பாண்டிசெந்தில்குமாா், களப்பணியாளா்கள் பிரபுதாஸ், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com