பல்கலை. இறகுப்பந்துப் போட்டி: விஐடி அணிக்குப் பாராட்டு
By DIN | Published On : 05th December 2019 02:23 AM | Last Updated : 05th December 2019 02:23 AM | அ+அ அ- |

இறகுப்பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற விஐடி அணியினரைப் பாராட்டிய விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், உதவித் துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன்.
பல்கலைக்கழங்களுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற விஐடி பல்கலைக்கழக அணிக்கு விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், உதவித் துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாநில அளவிலான இறகுப்பந்துப் போட்டிகள் விஐடியில் நடைபெற்றன. இப்போட்டியில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணிகள் பங்குபெற்றன.
இறகுப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விளையாட்டு துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் கோப்பைகள், பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். போட்டியில் விஐடி சாா்பில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற ஆண்கள், பெண்கள் அணிகளை விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், உதவித் துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா். உடற்கல்வி துறை இயக்குநா் என்.வி.தியாகசந்தன், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.