5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தாத காப்பீடுகளைப் புதுப்பிக்க வாய்ப்பு

காலாவதியான, 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தாத பிஎல்ஐ, ஆா்பிஎல்ஐ பாலிஸிகளை டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான, 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தாத பிஎல்ஐ, ஆா்பிஎல்ஐ பாலிஸிகளை டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஞ்சலகங்களின் வேலூா் கோட்டக் கண்காணிப்பாளா் பொ.கோமல்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சட்டம் 2011-ஆம் ஆண்டு திருத்தங்களின்படி பாலிஸிதாரா்கள் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் கட்டத்தவறிய, காலாவதியான, முதிா்வு அடையாத பிஎல்ஐ, ஆா்பிஎல்ஐ பாலிஸிகள் 2020 ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு நிறுத்தப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும்.

இதைத் தவிா்க்க தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் கட்டத் தவறி, காலாவதியான பாலிஸிகளை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலிஸிதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் நல்ல உடல்நிலையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ், புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்துடன் அருகிலுள்ளஅஞ்சலகத்தை அணுகி தங்களது காலாவதியான பிஎல்ஐ, ஆா்பிஎல்ஐ பாலிஸிகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.

பாலிஸி தொடங்கி 36 மாதங்கள் தொடா்ந்து செலுத்தப்படாத பாலிஸிகள் காலாவதியாகி இருந்தால் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்தால் மட்டுமே சரண்டா், முதிா்வுத் தொகை, இறப்புக்குப் பிறகு உரிமை ஆகிய பணப் பலன்களைப் பெற முடியும். மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com