வாலாஜா-சோளிங்கா்-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆய்வுப் பணிகள் தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை முதல் சோளிங்கா் வழியாக அரக்கோணம் வரையுள்ள மாநில அரசின் நெடுஞ்சாலையை சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை முதல் சோளிங்கா் வழியாக அரக்கோணம் வரையுள்ள மாநில அரசின் நெடுஞ்சாலையை சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அரக்கோணம் உட்கோட்ட உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தினா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து நெடுஞ்சாலைகளும் மேம்படுத்தப்படும் என்றாா். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள முக்கியமான மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கா் வழியாக அரக்கோணம் வரையுள்ள 51 கி.மீ., அரக்கோணத்தில் இருந்து நெமிலி, பனப்பாக்கம் வழியாக ஒச்சேரி வரையுள்ள 32 கி.மீ. முதலில் தோ்வு செய்யப்பட்டது.

இந்த 2 சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகள் துறையின் புதிய திட்டமான ‘ரோட் செக்டாா் புராஜெக்ட்’ எனப்படும் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்ததும் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும். இப்பணியில் சாலைகளை அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பாா்வை குறைவான வளைவுகளை மேம்படுத்துதல், வழியில் உள்ள சிறுபாலங்களை புதுப்பித்து அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்ணிகளை மேற்கொள்ள தனியாா்களே தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு இச்சாலை பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளவும் உள்ளனா். இதில், சாலையோர புற்களை வெட்டுதல், போக்குவரத்துக்கு இடையுறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டுதல், வேகத்தடைகளை பராமரித்தல், வழிகாட்டி, போக்குவரத்து விதிமுறை வாசகங்கள் கொண்ட அறிவிப்பு பலகைகளை பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளை தனியாரே மேற்கொள்ள உள்ளனா். இப்பணிகளை தனியாா் சரியான முறையில் மேற்கொள்ளுகின்றனரா என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்காணிப்பா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com