Enable Javscript for better performance
போலி சான்றிதழ்: திருவள்ளுவர் பல்கலை. முன்னாள் தேர்வு அலுவலர், 6 பேராசிரியர்கள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    போலி சான்றிதழ்: திருவள்ளுவர் பல்கலை. முன்னாள் தேர்வு அலுவலர், 6 பேராசிரியர்கள் மீது வழக்கு

    By DIN  |   Published on : 01st February 2019 01:29 AM  |   அ+அ அ-   |    |  


    போலி அனுபவச் சான்றிதழ்களைக் கொண்டு கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியில் சேர்ந்த 6 பேர் மீதும், அவர்களுக்கு போலி சான்றிதழ் அளித்ததாக திருவள்ளுவர் பல்கலைக் கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மீதும் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    வேலூர் மாவட்டம், சேர்க்காடு பகுதியிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக கடந்த 2015-ஆம் ஆண்டு பணியாற்றியவர் பக்கிரிசாமி அசோகன். 
    இவருக்கு பணி அனுபவச் சான்றிதழ் அளிக்க அதிகாரம் இல்லாத நிலையிலும், அந்தப் பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றிய ஆனந்த்பாபு, ஜெயந்தி, எழிலரசி, விஜயகிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் 2011 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்கலைக் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றியதாக போலியாக அனுபவச் சான்றிதழ் அளித்ததாகத் தெரிகிறது. இந்த சான்றிதழ்களைப் பெற்ற அவர்கள் 6 பேரும் திருப்பத்தூர், தென்னாங்கூர் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக நிரந்தரப் பணியிடத்தில் சேர்ந்தனராம்.
    இதுதொடர்பாக, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்த ஐ.இளங்கோவன், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2016-ஆம் ஆண்டு புகார் அளித்தார். 
    எனினும், இதன்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததை அடுத்து அவர், காட்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளங்கோவன் புகார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
    இதன் அடிப்படையில், போலி அனுபவச் சான்றிதழ் அளித்திருப்பதாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பக்கிரிசாமி அசோகன் மீதும், அந்த போலிச் சான்றிதழ்களைக் கொண்டு பேராசிரியர்களாகப் பணியில் சேர்ந்த ஆனந்த்பாபு, ஜெயந்தி, எழிலரசி, விஜயகிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp