ஆசிரியர்கள் இடமாற்றம்: ஜாக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd February 2019 01:10 AM | Last Updated : 02nd February 2019 01:10 AM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆலங்காயத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வாணியம்பாடி வட்டார ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆலங்காயம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.