ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.87 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.87 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக பெண்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.87 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக பெண் ஒருவர் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தார்.
பள்ளிகொண்டாவை அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி லட்சுமி (42). இவரது மகன் விக்னேஷ், ராணுவத்தில் பணியில் சேர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இவர்களது வீட்டின் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராம்குமார் வசிக்கிறார். இவரும், அவரது உறவினர்களான ஜெயசங்கர், நிர்மலா ஆகியோர் விக்னேஷுக்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லட்சுமியிடம் 3 தவணைகளில் ரூ. 2 லட்சத்து 87 ஆயிரம் பணம் பெற்றனராம். ஆனால், கூறியபடி ராணுவத்தில் வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட லட்சுமி, இதுதொடர்பாக வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். 
அதில், ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.87 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரவும் வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com