சுடச்சுட

  

  மாம்பாக்கம் கிராமத்தில் எட்டி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி எருது ஆட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ஆற்காட்டை அடுத்த கலவை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள எட்டி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பாரம்பரியமாக நடத்தப்படும் எருது ஆட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
   விழாவையொட்டி, ஊர் பொதுமக்கள் எட்டியம்மன் கோயில் முன் பொங்கலிட்டு பூஜைகள் செய்து  வழிபட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
  இதைத் தொடர்ந்து, கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சுவாமியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் எருது ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அப்போது, சீறிப் பாய்ந்த காளைகளால் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
  இந்த எருது ஆட்டம் நிகழ்ச்சியைக் காண சொரையூர், மேலப்பந்தை, அக்கூர், குப்படிசாத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai