4 பள்ளிகளுக்கு கல்வி வளர்ச்சி நாள் நிதி ரூ.2.50 லட்சம்: ஆட்சியர் வழங்கினார்

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 4 அரசுப் பள்ளிகளுக்கு கல்வி வளர்ச்சி

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 4 அரசுப் பள்ளிகளுக்கு கல்வி வளர்ச்சி நாள் நிதியாக மொத்தம் ரூ. 2.50 லட்சத்தை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைத் தேர்வு செய்து பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
 இந்தத் தொகையை பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதன்படி, இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளிகளாக தேர்வாகி உள்ள காவேரிபாக்கம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம், மேட்டுமுள்ளுவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம், அண்ணாண்டப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 75 ஆயிரம், ஏலகிரிமலை அத்தனாவூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 
ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 2.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதிக்கான காசோலையை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் செவ்வாய்க்கிழமை வழங்கினார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com