கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கர்நாடக சங்கீத கச்சேரி

தக்கோலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சங்கீத வித்வான் சுமித்ரா வாசுதேவ் பங்கேற்ற கர்நாடக சங்கீதக் கச்சேரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தக்கோலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சங்கீத வித்வான் சுமித்ரா வாசுதேவ் பங்கேற்ற கர்நாடக சங்கீதக் கச்சேரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. 
இப்பள்ளியில் ஆண்டுதோறும் இசைக் கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சங்கீத வித்வான் பிஸ்மில்லாகான் யுவபுரஸ்கார் விருது பெற்ற சுமித்ரா வாசுதேவின் கர்நாடக இசைக் கச்சேரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவருடன் கணபதிராமன் (மிருதங்கம்), சாரதா ராமன் (வயலின்) ஆகியோரும் பங்கேற்றனர்.
கச்சேரியை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) மண்டல பயிற்சி மைய முதல்வரும், பள்ளியின் தலைவருமான டிஐஜி வினய் கஜ்லா தொடங்கி வைத்தார். இதில், ஆலாபனை, நிரவல், தானம் ஆகியவை அடங்கிய சவேரி ராகத்தில் பல்வேறு பாடல்களை சுமித்ரா வாசுதேவ் பாடினார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், சிஐஎஸ்எப் அலுவலர்கள் உள்ளிட்டோர் கச்சேரியைக் கேட்டு ரசித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com