வேலூரில் பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்

வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வேலூரில் வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட உள்ளன. 

வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வேலூரில் வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட உள்ளன. 
இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் இருசக்கரம், 3 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் உடைக்கத் தகுதியுள்ள நிலையில் உள்ளன. எனவே, வரும் வெள்ளிக்கிழமை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. வாகனத்தை ஏலம் எடுக்க வருவோர் நுழைவுக் கட்டணமாக ரூ. 50 செலுத்திய பிறகு ஏலம் கோர அனுமதிக்கப்படுவர். ஏலத் தொகையுடன் 12 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கான ரசீது வழங்கப்படும். இதையே வாகனத்துக்கான ஆவணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரை தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com