திருப்பத்தூரில் மோட்ச தீபம்
By DIN | Published On : 20th February 2019 06:51 AM | Last Updated : 20th February 2019 06:51 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு ஜடையனூர் ராமானுஜதாச சுவாமிகள் மோட்ச தீபம் ஏற்றினார். மாநிலத் துணைத் தலைவர் சக்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் ராஜா முஹம்மது காமில் இரங்கல் உரை வாசித்தார். கல்லூரியின் தேசிய சாரணர் படையின் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரிச் செயலர் ஹாஜிஅன்வருல்லா, வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் இணைச் செயலர் நரி முஹம்மத் நயீம், கல்லூரி முதல்வர் முஹம்மத் இலியாஸ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள் வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கேத்தாண்டப்பட்டியில் இருந்து கூத்தாண்டகுப்பம், ஓம்சக்தி கோயில் வரை மெழுகு வர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம் சென்றனர்.