தென்னந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு
By DIN | Published On : 20th February 2019 03:10 AM | Last Updated : 20th February 2019 03:10 AM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை மலைப்பாம்பு பிடிபட்டது .
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி, மேல் கன்றாம்பல்லி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தையொட்டியுள்ள கடாம்பூர்- உதயேந்திரம் நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பாம்பு ஊர்ந்து சென்று வெங்கடசமுத்திரத்தில் உள்ள சசிகலா என்பவரது தென்னந்தோப்புக்குள் புகுந்தது. அப்போது, அங்கு விவசாயப் பணியில் இருந்தவர்கள் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர். தகவலறிந்த ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதா, வனக் காப்பாளர் விஜயன், வனக்காவலர் லட்சுமணன் அங்கியோர் அங்கு சென்று மலைப்பாம்பைப் பிடித்து ஆம்பூர் வனச்சரகம், துருகம் காப்பு காட்டில் விட்டனர்.