முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
சர்வதேச கராத்தே போட்டி: குடியாத்தம் வீரர்களுக்கு 6 பதக்கம்
By DIN | Published On : 28th February 2019 05:50 AM | Last Updated : 28th February 2019 05:50 AM | அ+அ அ- |

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் குடியாத்தம் வீரர்கள் 6 பதக்கங்களை வென்றனர்.
இலங்கை, கண்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், குடியாத்தம் சர்ணாஸ் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட தனுஷ் வெள்ளிப் பதக்கமும், சுவேதா 2 வெண்கலப் பதக்கங்களையும், சரண்யா, அரீஷ், திருவரசன் ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
பதக்கம் வென்ற வீரர்களையும், பயிற்சியாளர் எஸ்.சரவணனையும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கராத்தே நடுவர் சலாம் குவாடியர் மசூத் பாராட்டினார்.
அரக்கோணத்தில்...
அரக்கோணத்தில் உள்ள ஜப்பான் ஷீட்டோராய் கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் பரம்பரா அகாதெமியில் நடைபெற்ற விழாவுக்கு பயிற்சி பள்ளியின் தலைவரும், கராத்தே பயிற்சிக் கழக தேசிய நடுவரும், மாநில முதன்மை பயிற்சியாளருமான ஜி.லோகியா தலைமை வகித்தார்.
இதில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணை கமாண்டன்ட் டி.எம்.ஜிதேஷ் பயிற்சி பெற்றவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் 100 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பரம்பரா அகாதெமி முதல்வர் டி.தமிழ்செல்வம், கராத்தே பயிற்சியாளர்கள் எஸ்.திலீப், என்.வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.