முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
டிரெய்லர் லாரி - மினி லாரி மோதல்: 2 பேர் சாவு
By DIN | Published On : 28th February 2019 05:50 AM | Last Updated : 28th February 2019 05:50 AM | அ+அ அ- |

ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் அருகே டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிந்தனர்.
ஆற்காடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாஸ்கர் (34). இவர், செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியில் இருந்து மினி லாரியில் தக்காளி ஏற்றிக்கொண்டு ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சென்னை நோக்கி சென்ற டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதியது. இந்த விபத்தில், மினி லாரியின் ஓட்டுநர் பாஸ்கர் மற்றும் அதில் இருந்த கோபிநாத் (53) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து ரத்தினகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.