முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 28th February 2019 05:48 AM | Last Updated : 28th February 2019 05:48 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை அருகே ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டப் பயனாளிகள் பட்டியலில் முறைகேடு நடப்பதாகக் கூறி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பயனாளிகள் பட்டியல் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டப் பயனாளிகள் பட்டியிலில் முறைகேடு நடப்பதாகவும், பாரபட்சமின்றி தகுதியானவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி அக்கிராமத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் பங்கேற்றனர்.
தகவலறிந்த சிப்காட் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.