முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ரூ. 9.86 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
By DIN | Published On : 28th February 2019 05:46 AM | Last Updated : 28th February 2019 05:46 AM | அ+அ அ- |

வாணியம்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ரூ. 9.86 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளை மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி நெடுஞ்சாலை கோட்டத்தில் வாணியம்பாடி தொகுதிக்கு உள்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர மாவட்ட சாலைகளில் 2018-2019-ஆம் நிதியாண்டில் சிஆர்டிஐடிபி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக ரூ. 9 கோடியே 86 லட்சத்து 35 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, வாணியம்பாடி, ஆலங்காயம், காவலூர், ஜமுனாமரத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 22 கி.மீ. நீளத்துக்கு இருவழித்தடத்தை மூன்று வழித்தடமாக அகலப்படுத்தி சாலைப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் தொடக்க விழா வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு வாணியம்பாடி கோட்டப் பொறியாளர் ரவி தலைமை வகித்தார். உதவிக் கோட்டப் பொறியாளர் புருஷோத்தமன், உதவிப் பொறியாளர் கண்ணன், சாலை ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் நிலோபர் கபீல் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதில், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் சதீஷ்குமார், சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.