வாணியம்பாடி பாலாற்றில் இயங்கி வந்த ரசாயனத் தொழிற்சாலையை மூட உத்தரவு

வாணியம்பாடி பாலாற்றின் கரையோரம் இயங்கி வந்த தனியார் ரசாயன  தயாரிப்பு தொழிற்சாலையை மூட அதிகாரிகளுக்கு சார்-ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

வாணியம்பாடி பாலாற்றின் கரையோரம் இயங்கி வந்த தனியார் ரசாயன  தயாரிப்பு தொழிற்சாலையை மூட அதிகாரிகளுக்கு சார்-ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியில் தோல் தொழிற்சாலைக்குத் தேவையான ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுநீர் பாலாற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வருகிறது. மேலும், வாணியம்பாடி நகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சி மற்றும் ஜாப்ராபாத் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பாலாற்றில் கொட்டப்பட்டு வருகின்றன. 
பாலாற்றை தூய்மைப்படுத்தவும், ரசாயன தயாரிப்பு தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பத்தூர் சார்-ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். 
அதன் பேரில் திருப்பத்தூர் சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி, வட்டாட்சியர் கிருஷ்ணவேனி, மாவட்டச் சுற்றுச்சூழல் அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பாலாற்றுப் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, இனி பாலாற்றில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சார்-ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், முறைகேடாக அனுமதியின்றி பாலாற்றின் கரையோரம் இயங்கி வரும் ரசாயனத் தொழிற்சாலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com